Botanical Name: Phyla Nodiflora
Common Name: Purple Lippia, Frog
Fruit
Sanskrit: Vasuka, Vasir
Hindi: Jalpapli, Jal buti, जल बूटी, Bukkan
Tamil: Podudhalai, Poduthalai
Manipuri: Chinglengbi
Marathi: Jalapimpali, Ratolia, Vakkan
Malayalam: Nirthippali, Jalatippali
Telugu: Bokkena
Kannada: Nelahippali
Konkani: Adali
Description:
Phyla Nodiflora is a flowering,
broadleaf plant native to South America. It is grows in a groundcover or
turflike manner, and is often present in yards. The inflorescence consists of a
purple-coloured centre encircled by small white-to-pink flowers. The flower
takes on a match-like look, which is why the plant is called matchweed. The
leaf arrangement is opposite. Each leaf has one to seven teeth on each edge
starting at the widest point and continuing to the tip.
Medicinal Benefits of Phyla
Nodiflora
For Leucorrhoea mix dried leaf
powder of Phyla Nodiflora with Cumin seed powder in 2:1 ratio. Take 4g of the
mixture with lukewarm water once a day.
For Piles, Chew 2-3 leaves of Phyla
Nodiflora twice a day.
For Skin, Use leaf paste of Phyla
Nodiflora on the infected Skin or Ulcers. It helps in the ripening of Ulcers.
Phyla Nodiflora helps to get rid of
dandruff, Grind leaves of Phyla Nodiflora to make paste. Apply it on scalp and
hair. Wash after 2 hours.
இதன் இலை,
வேர் மருத்துவப் பயன் கொண்டது.
ஒற்றைத் தலைவலி நீங்க, இருமலை தடுக்க, நீரிழிவு நோயின்
தாக்கம் குறைய, அக்கிப் புண்ணை குணப்படுத்த, வயிற்று உபாதைகள் நீங்க, வெள்ளை படுதலை குணப்படுத்த, பொடுகு நீங்க, விரை வீக்கம் குறைய, கருப்பை வலுப்பெற, கை கால் வீக்கம் குணமாக
பயன்படுகிறது.
இது தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம்,
குட்டை, வாய்க்கால்
வரப்புகளில் இந்த கீரைகள் அதிகம் காணப்படும். பெரும்பாலானோர் இதனை அறிந்திருக்க
வாய்ப்பில்லை. ஆனால் இது தென்னிந்தியா முழுவதும் அதிகம் காணப்படுகிறது.
இதன் இலை,
வேர் மருத்துவப் பயன் கொண்டது.
ஒற்றைத் தலைவலி நீங்க
பொடுதலை இலைகளை அரைத்து தலைவலி உள்ள பகுதியில்
பற்று போட்டால் ஒற்றைத் தலைவலி விரைவில் நீங்கும்.
இருமலை தடுக்க
இருமல் பாதிப்புள்ளவர்கள் பொடுதலை இலையை சுத்தம்
செய்து அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால்
இருமல் குணமாகும்.
நீரிழிவு நோயின் தாக்கம் குறைய
நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு பொடுதலை
சிறந்த மருந்தாகிறது. பொடுதலையை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி
சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் வெகுவாக குறையும்.
அக்கிப் புண்ணை குணப்படுத்த
உடல் சூட்டால் உடலில் சிறு சிறு கட்டிகள் தோன்றி
கொப்புளங்களாக உருவாகும். இதனை அக்கி என்பர். இது உடலில் அதிக எரிச்சலை
உண்டாக்கும். பாதிக்கப்பட்டவர்கள்,
பொடுதலையை நன்கு மைபோல் அரைத்து அக்கியின்
கொப்புளங்கள் மீது தடவினால் எரிச்சல் நீங்குவதுடன் கொப்புளங்கள் உடைந்து புண்கள்
விரைவில் ஆறும்.
வெள்ளை படுதலை குணப்படுத்த
பெண்களை பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும்
நோயில் வெள்ளைப்படுதலும் ஒன்று. இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் பொடுதலையை நிழலில்
உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு
வரவேண்டும். அல்லது காலை,
மாலை இருவேளையும் கஷாயம் செய்து
சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
நூறு கிராம் பொடுதலை இலையைஅரை டம்பளர்
நீரிலிட்டுகாய்ச்சி கால்பாகம் சுண்டின பின் வடிகட்டி அதை இரண்டு பங்காக்கி காலை, மாலை குடித்து வர சிறுநீரிலுள்ள இனிப்பை மாற்றும்.
இக்கஷாயத்துடன் வால்மிளகு,
சூரணம் சேர்த்து குடித்துவர சிறுநீரக
நீர்த்தாரைப்புண், அதனால் ஏற்படும் வெள்ளைப் படுதல் குணமாகும்.
முடி இருப்பவர்களுக்கு எல்லாம் பொடுகு ஒரு பெரும்
பிரச்சனையாகும். பொடுகு உள்ளவர்களுக்கு முடி உதிரும், எத்தனை தைலங்கள் தேய்த்தாலும் குணமாகாது. பொடுதலை 150 கிராம்,
தோலுரித்த சின்ன வெங்காயம் 250 கிராம்,
வெந்தயம் 50 கிராம் மூன்றையும்
இடித்து இரும்பு வாணலியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்விட்டு அதில் மேற்படி
சரக்கை கலந்து சிறு தீயில் எரிக்கவும். நீர் சுண்டி தீயாமல் மிதக்கும்
பக்குவத்தில் இறக்கி, ஆறவிட்டு வடிகட்டி பத்திரப்படுத்தவும், இதை தினமும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தலையில்
தேய்த்து தலைவாரிக் கொள்ள வேண்டும்.
பொடுகுக்கு மேற்பூச்சு மட்டும் முழு பலனளிக்காது.
உள்ளுக்கும் பொடுதலை இலைகளை நெய்விட்டு வதக்கி, புளி, உப்பு,
மிளகாய் போட்டு சேர்த்து துவையல் செய்து
சாப்பிட பொடுகு குணமாகும்.
சிலருக்கு வாயுவினாலோ அல்லது ஏதேனும் அடிபட்டாலோ
விரைப்பையில் வீக்கம் உண்டாகும். இவர்கள் பொடுதலையை மைபோல் அரைத்து வீக்கம் உண்டான
பகுதியில் பற்று போட்டால் விரைவீக்கம் குறையும்.
சில பெண்களுக்கு கருப்பை வலுவில்லாமல் இருப்பதால்
கருச்சிதைவு உண்டாகும். இவர்கள் பொடுதலையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கருப்பை வலுப்பெறும்.
பொடுதலை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, நல்லெண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து ஊறிய பின்
குளித்து வந்தால் தலையிலுள்ள சொறி,
சிரங்கு குறையும்..
வயிற்று உபாதைகள் நீங்க
பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி
வைத்துக்கொண்டு, காலை,
மாலை என இருவேளையும் கஷாயம் செய்து இரண்டு
நாட்களுக்கு அருந்தி வந்தால் வயிற்று உபாதைகள் நீங்கும்.
No comments:
Post a Comment